வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இம்முறை இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணிகள் மத்தியில் 25 சதவீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்

‘கொவிபொல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி

‘நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித