அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் நாமல் எம்.பி வெளியிட்ட தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் அத்தகைய முடிவு எவ்வாறு எட்டப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுற்றுலாத் துறை ஆயிரக்கணக்கான சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாகன சாரதிகளால் ஆதரிக்கப்படுகிறது என்றும், இந்த முடிவு முறையான ஆலோசனை இல்லாமல் செயற்படுத்தப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்கள் இங்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தம் இலங்கையில் ஏற்கனவே உள்ளது. ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

ஏழாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது