வணிகம்

சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலத்தில் காத்திரமான முறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO)-சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலப்பகுதியில் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டிருப்பதாக ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, கடந்த 52 நாட்களில் இத்துறையில் பின்னடைவு காணப்பட்டிருந்தது. இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடத்தின் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய அரசியல் ஸ்திரத்தன்மை இடம்பெறாதிருந்தால், இலங்கையினால் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத் தொழில்துறையின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும் என்றும் ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி

இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்