வணிகம்

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு அரசினால் ஓய்வூதியம்

(UTV | கொழும்பு) – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான திட்ட அறிக்கை வகுக்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றினால் சுற்றுலாத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள், தொழிலை இழந்துள்ள நிலையை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமது அதிகார சபையில் சுமார் 250,000 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக தம்மிகா விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

தேயிலை ஏற்றுமதியில் அதிகரிப்பு