சூடான செய்திகள் 1

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)- பாணந்துறை – ஹொர்துடுவ பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மாதுபான போத்தல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் பாணந்துறை வடக்கு பொலிசாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 09 கத்திகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்