உள்நாடு

சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

(UTV|கொழும்பு) – தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று காலை அழைத்துவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த படகில் இருந்து சுமார் 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 6000 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை

மஹிந்தாவிற்கு ஒவ்வொரு விகாரையிலும் ஒரு வீடு, ஒரு அறை கட்டப்பட்டிருந்தது – சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே

editor