உள்நாடு

சுனாமியின் நினைவலைகள் …

(UTV | கொழும்பு) –  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இயற்கையின் கோரமான சுனாமி ஏற்பட்டு அதன் சுவடுகளுக்கு இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமிப்பேரலையில் ஆசிய நாடுகளே நிலை குலைந்து போயின.

இந்தப்பேரலை சுமார் 100 அடி உயர்த்திற்கு உருவெடுத்து, இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை விழுங்கியது.

இதன் காரணமாக ஆசிய நாடுகளில் 227, 898 உயிர்கள் பலியாகின.

எண்ணற்ற மக்கள் நிர்கதியாகினர்.

இந்து சமுத்திர நாடுகளில் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளும் உடைமைகளும் சேதமாகின.

அதனை நினைவு கூறும் வகையிலும் சுனாமி விழிப்புணர்வை மக்களுக்கு அழிக்கும் வகையிலும் சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இப்பேரலையின் சீற்றத்துக்கு பலி போன உயிர்களுக்கு utv அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொடருந்து சேவையில் தாமதம்!

சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor