சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை சந்தித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி
அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பில்
தெளிவுபடுத்தினார்.

இதன்போது புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படும்
ஒத்துழைப்பை வழங்க தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர
ஆகியோரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று முதல் நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் – விழிப்புணர்வு செயற்பாடுகள் – அமைச்சர் ரிஷாத் ஆலோசனை

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்