உள்நாடு

சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என் சந்தேகத்தில் 110 பேருக்கும் அதிகமானோர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினம் – பிரதமர் ஹரினி

editor

இலங்கை வந்தடைந்த ஜப்பான் அமைச்சர்!