உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவையையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த அஞ்சல் ரயில் சேவையையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் பொலன்னறுவை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மலையக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

editor