சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டித்வா புயலுக்கு பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதும், சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்து அறிவிப்பதும் இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் சீனா செல்லும் வழியில், சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை இலங்கை வந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த குழுவினர் தமது விஜயத்தை நிறைவு செய்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
