கேளிக்கை

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் திகதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடிப்பில்வெளியான 2.0 இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது.

சீனாவிலும் 2.0 வெளியாவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் வரும் ஜூலை மாதம் 12-ம் திகதி அங்கு சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.0 படத்தின் பாலிவுட் டைட்டிலான ரோபோட் 2.0 என்ற டைட்டிலுடன் சீன மொழியிலும், ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சீனாவில் எச்.ஒய் நிறுவனம் வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள்

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி

பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனின் மகன்