உள்நாடு

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 600,000 சினோபோர்ம் தடுப்பூசி குப்பிகள் இன்னும் ஒரு வார காலப்பகுதியில் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவின் சினோர்பாம் குப்பிகளை இலங்கையில் உள்ள சீனப்பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தம்மால் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் வாழும் சீன நாட்டினருக்கு தடுப்பூசிகளை செலுத்த இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் 60 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Related posts

நாட்டில் டிஜிட்டல் தொழில்முனைவோர் மீதான 18% வரி விதிப்பதை நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச கோரிக்கை

editor

கேரளாவில் பரவும் கொரோனா வைரஸ் – இலங்கைக்கும் எச்சரிக்கை

மகனிடமே கொள்ளையிட்ட தாய் சிக்கிய சி.சி.டி.வி தடயம்!