உள்நாடு

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கு வருகை தரும் சீன ஆராய்ச்சிக் கப்பலான Xin Yan-6 குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா-சீனா மோதலில் இலங்கை அரசாங்கம் மீண்டும் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அனுமதிக்குமாறு சீனத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் சீனாவின் இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சீனக் கப்பல் உளவுத்துறை தகவல்களைத் தேடும் திறன் கொண்ட கப்பல் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமகாலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை, குறித்த சீனக் கப்பலால் இராஜதந்திர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | சட்டம் போதாது என்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளது – ஜனாதிபதி அநுர

editor

சஹ்ரானுக்கு அடைக்கலம் வழங்கிய திருமண பதிவாளர் கைது

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை – மின்சார வயரின் மீது முறிந்து வீழ்ந்த தென்னை மரம்

editor