வணிகம்

சீகிரியாவை பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாலாயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது என சிகிரியாவின் திட்டப் பணிப்பாளர் மேஜர் அனுர நிசாந்த தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுமார் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது…

Oracle Cloud தொழில்நுட்பத்துடன் வேகமான புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய HNB Assurance ஆயத்தமாகிறது