உள்நாடு

சிவனொளிபாத மலை யாத்திரை : விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – சிவனொளிபாத மலைக்கான பருவக்காலம், ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், அந்த பருவக்காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபோதாகம இனால் வெளியிடப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வோர், தம்முடன் தடுப்பூசிகளை செலுத்தியமைக்கான அட்டைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில் சிவனொளி பாத மலைக்கு செல்வோருக்கு கடும் சுகாதார வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவனொனிபாத மலைக்கு செல்லவேண்டிய முறை, கடைப்பிடிக்கவேணடிய சுகாதார ஒழுங்குமுறைகள், தங்குமிடங்கள் போன்றவை தொடர்பில் இந்த சுகாதார வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பித்து 2022 மே மாதம் 16ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

 

Related posts

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

அறுகம்பேயில் இஸ்ரேலியரை காப்பாற்றும் பொலிஸார்! நடந்தது என்ன.?

editor

நீதிமன்ற அவமதிப்பு 2வது வழக்கில் ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை