உள்நாடு

சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் சீத்த கங்குல பாலம் திறந்து வைப்பு!

இரத்தினபுரி குருவிட்ட ஏரத்தன ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் ஊடாக அமைக்கப்பட்ட சீத்த கங்குல பாலம் அண்மையில் (13) பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

இதற்கென சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் மூலம் முப்பது (30) மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

60 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இந்தப் பாலம், ஸ்ரீ பாத யாத்திரைக்காக வரும் பக்தர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை வழங்குகிறது.

இரத்தினபுரி குருவிட்ட ஏரத்ன ஊடாக சிவனொளிபாதமலை யாத்திரைக்காக பயணிக்கும் பக்தர்கள் சீத்த கங்குலவை கடக்கும்போது கடும் அசௌகரியங்களை எதிர் நோக்கியது டன் இதனூடாக மரங்களும் நிகழ்ந்துள்ளன.

மழை காலத்தில் பக்தர்கள் சீத்த கங்குலவின் இருபுறமும் தண்ணீர் வடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மேற்படி சீத்த கங்குல பாலம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சஞ்சீவ கொடல்லவத்த, அமைச்சின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ருவன் பிரேமரத்ன, நிர்வாக பொறியாளர் சமன் வெரஹெர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித்

editor