உள்நாடு

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொட்டன் பட்டுக்காக (Cotton Bud) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய், சிலவகை பக்கெட்கள் (அதாவது ஷம்பு உள்ளிட்ட சிலவகைகள் பொதி செய்யப்படும் பக்கேட்டுகள்) மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொட்டன் பட்டை, சுகாதார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரட்டைக் கொலை – சந்தேக நபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

editor

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்