உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் முடியவில்லை -துவாரகா என அடையப்படுத்தப்பட்டுள்ள பெண் உரை.

இன்று அதிகாலை முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

editor