உள்நாடு

சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து வெளியான அறிவிப்பு

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.

Related posts

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்