உள்நாடு

சில பிரதேசங்களில் 24 மணிநேர நீர்வெட்டு

(UTV|GAMPAHA) – நீர்கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பிரதேசங்களில் இன்று(06) காலை 9 மணி முதல் நாளை(07) காலை 9 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பம்புகுளிய நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை பெற்றுக் கொடுப்பதற்காக கடான திட்டத்தின் ஊடாக மின்சார ஜெனரேட்டர் ஒன்றை பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவ்க்கப்படுகின்றன.

அதன்படி, நீர்கொழும்பு மாநகர சபைக்குற்பட்ட பிரதேசம், கொச்சிக்கடை, தூவ, பிடிபன, துன்கால்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம பிரதேசம், கடான அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கட்டுநாயக்க விமான படை முகாம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.

போதைப் பொருள் – பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை