உள்நாடு

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்டு தீர்மானமெடுங்கள் – பிரதமர் ஹரினி

editor

மு.கா வின் தேசிய பட்டியல் எம்.பி பதவி குறித்து நிசாம் காரியப்பர் வெளியிட்ட தகவல்

editor

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்