வகைப்படுத்தப்படாத

சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி

(UTV|INDIA)-டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்ததால், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு 5 வயது குழந்தை உட்பட 7 பேர் பலியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக கூறினர்.

Related posts

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு

PTL suspension extended

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை