மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவ்விரு மீனவர்களும் இன்று (19) அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் சென்ற படகு கடலில் மிதந்துகொண்டிருந்ததை மற்றொரு மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கண்டு, அது குறித்து கரைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, குறித்த மீனவர்களைத் தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், வெல்ல, கருச பாடுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய இரண்டு மீனவர்களாவர்.
அவர்கள் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு தற்போது கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து சிலாபம் வெல்ல மீனவர் சங்கத்தினால் இலங்கை கடற்படைக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
