உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களுள் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட 11 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றமை தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை – திஸ்ஸ

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!