உள்நாடு

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு HRC அழைப்பு

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12) அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(12) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலர், கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து 

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்