வகைப்படுத்தப்படாத

சிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொண்டனர் நீதி மன்றில் வாக்குமூலம்

(UDHAYAM, COLOMBO) – சிறைக்காவலரும் கைதிகள்  சிலருமே அடித்துக்  கொண்டனர்  என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்  சக சந்தேக நபர்களால்  சாட்சியம்  அளிக்கப்பட்டுள்ளது

கடந்தமாதம்  குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர் எனும்  சந்தேகத்தின் பெயரில் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு  நீதிமறத்தில்  முற்ப்படுத்தப்பட்டு  நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக  வவுனியா  சிறைச்சாலையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த கைதிகள்  மூவரில்     ஒருவர்  சிறையில் இறந்த நிலையில் மீதி இருவரும் இன்று கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் ஆயர்ப்பப்டுத்தப்பட்ட  போதே சக  சந்தேக நபர்கள் இவ்வாறு தெரிவித்தனர்

குறித்த நபரை சிறைக்காவலர்  ஒருவர்  தாகிய பின்னர்     சிலமாதங்களுக்கு  முன்னர்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின்  களஞ்சியத்தை உடைத்து  கஞ்சாவை  திருடிய குற்றச்சாட்டில்  தடுத்து வைக்கபப்பட்டுள்ள  கைதிகள்  அவரது கை, கால் என்பவற்றை  கட்டிவைத்து  தலையில்  தும்புத்தடியால்  தாக்கினார்கள் அதனாலையே அவர் இறந்துள்ளார்  என குறித்த நபர்களது சந்தேக நபர்கள்   தரப்பு சட்டத்தனரணி  மன்றில் தெரிவுத்துள்ளார்

குறித்த வழக்கை  விசாரித்த  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின்  நீதிபதி  சந்தேக நபர்கள் இருவரதும் வாக்குமூலங்களை  பொலிசார் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் மீண்டும்  எதிர்வரும்  ஏழாம்  திகதி  விசாரணைக்கு  எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய கிலுயுயே எரிமலை

Water cut in Rajagiriya and several areas

அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது