உள்நாடு

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

(UTV | கொழும்பு) –

பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த 42 வயதான இந்தோனேஷிய பெண் எனவும், அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் முதலில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து இந்த போதைப்பொருளுடன் கத்தாரின் தோஹாவுக்கு சென்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே, அது நடக்காது – ஜனாதிபதி அநுர

editor

சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

MV XPRESS PEARL சிதைவுகளை அகற்றும் ஆரம்ப பணிகள் ஆரம்பம்