உள்நாடுபிராந்தியம்

சிறுமியை பாலியல் சேட்டை செய்த லொத்தர் டிக்கெட் வியாபாரி கைது – வீரமுனை பிரதேசத்தில் சம்பவம்

வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (13) 9 வயதுடைய சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியை தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த (வயது 69) நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்,மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கே எ ஹமீட்

Related posts

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

editor

ஏமாற்றம் அடைந்துள்ள அரச ஊழியர்கள் – அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor