சூடான செய்திகள் 1

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

தங்க நகர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை மூன்று வருட காலமாக காதலித்து திருமணம் முடித்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பாக அப்பகுதி கிராம அதிகாரி மற்றும் பொது மக்களும் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு-கல்வியமைச்சர்

நாடுகடத்தப்படவுள்ள 8,000 வெளிநாட்டவர்கள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்