உள்நாடு

சிறிய-நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மா வழங்குவதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரிய அளவிலான பேக்கரிகளுக்கு கோதுமை மாவை விநியோகம் செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மாவு இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோதுமை மாவின் தரத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவும் தரமற்ற கோதுமை மாவைப் பயன்படுத்துவதால், பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்களைப் பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

நான் நீருக்குள் அமிழ்த்திய பந்தைப் போன்றவள் – ஹிருணிகா

editor

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்