உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பின்வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்:

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.சி. மேதவத்த, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, குற்றங்கள் மற்றும் வீதிப் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் கடமைகளையும் உள்ளடக்குவதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால, வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன, பொலிஸ் தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிகளில் இருந்து வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இத்துடன், பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.சி. சம்பத் குமார, விசேட பணிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

“உலக விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள்.”