வகைப்படுத்தப்படாத

சிரியா அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான குர்திஷ் போராளிகள் வசமுள்ள பகுதிகளை மீட்க அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்கள் குழுவும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்ரின் நகரை கைப்பற்ற அரசுப் படையுடன், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்தவர்களும் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக உச்சகட்டப் போர் நடத்தி வந்தனர்.

இதன் விளைவாக ஆப்ரின் நகரம் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் குர்திஷ் போராளிகள் வைத்திருந்த வெடிகுண்டு இன்று வெடித்து சிதறியது.

இதில், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்த 4 போராளிகள் மற்றும் அப்பகுதியில் வசித்த பொதுமக்களில் 7 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

China’s Sinopec sets up fuel oil unit in Sri Lanka

Sale of imported liquor without ‘EDSL’ sticker banned

மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகும் ஷின்சோ அபே…