வகைப்படுத்தப்படாத

சிரியாவின் யுத்த நிறுத்தத்திற்கு இதுவரையிலும் இணக்கம் காணப்படவில்லை

(UTV|SYRIA)-சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுலாக்குவதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனைத் தெரிவரித்துள்ளார்.

சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில் நடத்தப்படுகின்ற தீவிர குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் அங்கு 30 நாட்களுக்கான மோதல் தவிர்ப்பை அமுலாக்க வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

இதுதொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பேசப்பட்ட போதும், இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

குவைட் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில், சிரியாவில் நாடுமுழுவதும் 30 நாட்கள் யுத்த நிறுத்தத்தை அமுலாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை நிறைவேற்றப்பட்டு 72 மணி நேரத்தில் அமுலாக்கப்பட வேண்டும் என்பதோடு, மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் அடுத்த 48 மணி நேரத்தில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையின் பிரகாரம், சிரியாவில் 5.6 மில்லியன் மக்களுக்கு அவசர தேவைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மோதல் தவிர்ப்பானது, ஐ.எஸ்.தீவிரவாதிகள், அல் கைடா மற்றும் அல் நுஸ்ரா முன்னணி என்பவற்றுக்கு செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கையில் சிரிய அரச எதிர்ப்பு போராளிகள் குழு சிலவற்றையும் உள்ளடக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் இன்னும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த யோசனையை தாமதமின்றி நிறைவேற்றி மோதல் தவிர்ப்பை அமுலாக்குமாறு, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொழும்பில் ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு

Fair weather to prevail in most of Sri Lanka

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை