உள்நாடுவிளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

அதற்கமைய 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

Related posts

உலகத்தின் நம்பிக்கையை நாம் வெல்ல வேண்டும் – சாகல ரத்நாயக்க.

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!