உள்நாடு

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டிப்பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போரா பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர், அப்பிரதேசத்தை தனது ஸ்மார்ட் போன் ஊடாக காணொளிப் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போரா பள்ளிவாசலை இலக்கு வைத்து நாசகார செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அவர் குறித்த காணொளிகளைப் பதிவு செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனனர்.

அவரிடம் இருந்த கைத்தொலைபேசியும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

-அஷ்ரப் அலீ

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் – ஒரே பார்வையில்

editor

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு