கேளிக்கை

சினேகனுடன் இணையும் ஓவியா….

(UTV|INDIA)-பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார்.

மேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சினேகன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. எனினும் சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்