வகைப்படுத்தப்படாத

சிங்கப்பூரில் கிம் ஜாங் அன் – டிரம்ப் சந்திப்பு?

(UTV|SINGAPORE)-பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இதற்கிடையே, வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள ‘பீஸ் ஹவுஸ்’ என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், டிரம்ப் – கிம் சந்திப்புக்காக பல்வேறு நாடுகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால், இவர்கள் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது. சந்திப்பு குறித்த தகவல்கள் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை

Suspect injured after being shot at by Army dies