உள்நாடு

சிஐடிக்கு அழைக்கப்பட்டார் டாக்டர் ருக்‌ஷான் பெல்லன

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லனவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 9, 2025 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பாக பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“ருக்க்ஷன் பெல்லனவுக்கு தடுப்பூசி போட அனில் ஜெயசிங்க தயாராகிறார்” என்று கூறி வெளியிடப்பட்ட வீடியோவில் அசேல சம்பத் என்ற நபர் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தின் 4ஆவது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராகுமாறு டாக்டர் பெல்லனவுக்கு கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

இன்று அதிகாலை வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

editor