உள்நாடு

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மண் கடத்தல் : டிப்பர் சாரதி தப்பிப்பு – டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது!

இன்று புதன்கிழமை அதிகாலை 2.00  மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த  சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர்.
எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதனையடுத்து டிப்பர்  வாகனத்தை துரத்திச்  சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.
இதன்போது டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார். தமது ஊரில் மண் கடத்தல் இடம்பெறுவதை அறிந்த அந்த ஊர் இளைஞர்கள் மூவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் டிப்பரை துரத்தி வந்தனர்.
 இந்நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஊர் இளைஞன் அங்கிருந்து சென்ற நிலையில் மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதி இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரிஷாட் எம்.பிக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே முக்கிய சந்திப்பு!

editor

ஜனாதிபதி அநுரவின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

editor

சேறு பூசும் பிரச்சாரம் தொடர்பில் ஹரின் CCID இல் முறைப்பாடு