வகைப்படுத்தப்படாத

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

(UTV|CHILE)-தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

பெண் கைதியை கொடூரமாக கொலை செய்த சிறைக்காவலர்கள்

A strong NO from EU to death penalty

மாலைத்தீவு அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்