உள்நாடுபிராந்தியம்

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்து – இருவர் காயம்

ஹட்டன் வனராஜா பகுதி – மஸ்கெலியா பிரதான வீதியில், வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் இருந்ததால், முச்சக்கர வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதியான தந்தை, தாய் மற்றும் சிறிய குழந்தை ஆகிய மூவரில், தந்தையும் தாயுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!