சூடான செய்திகள் 1

சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள்

(UTV|COLOMBO)-மழையுடனான வானிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும்போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்டுள்ளனர்.

வாகனங்களை செலுத்தும்போது முன் விளக்குகளை ஔிரவிட்டவாறு வாகனங்களை செலுத்துமாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையுடனான வானிலை நிலவுகின்றபோது வேகமாக வானகத்தை செலுத்துவதை தவிர்க்குமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது அதிவேக வீதியை பயணிக்கும் வானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக வீதியின் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சாதாரன தினத்தில் அதிவேக வீதியில் 50,000 வாகனங்கள் பயணிப்பதாகவும் தற்போது 65,000 – 75,000 வாகனங்கள் பயணிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள்

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது