உள்நாடு

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் சித்திரக் கண்காட்சி.

(UTV | கொழும்பு) –

சாய்ந்தமருது கமு /கமு /அல்-ஹிலால் வித்தியாலய ஏற்பாட்டில் ‘மாணவர்களின் மனதில் தோன்றும் சித்திரங்கள்” எனும் தலைப்பில் பாடசாலை மட்டத்தில் ஆரம்ப பிரிவு, இடைநிலைப் பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் கண்காட்சி பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜிஹானா ஆலிப் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். என். எம்.மலீக், ஸாஹிறா கல்லூரி முன்னாள் அதிபர் ஏ. எல்.ஹம்ஸா, அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர்களான நுஸ்ரத் பேகம், ஷெறோன் டில்ராஸ் மற்றும் அல்-ஹிலால் வித்தியாலய முன்னாள் அதிபர் ஐ. எல். ஏ.மஜீத் அத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியின்போது பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட சித்திரங்கள் மாத்திரமன்றி மாணவர்களினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். சித்திரப்போட்டி மற்றும் கண்காட்சியை இப்பாடசாலையின் சித்திரப்பாட ஆசிரியைகளான பௌமியா, சூசான், திரோஸா பானு மற்றும் முபீதா ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து சபைகளிலும் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோம் – ரிஷாட் எம்.பி

editor

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்