உள்நாடு

சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை

(UTV | கொழும்பு) –  2020 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் தினம் குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என நாம் அறிவித்திருந்தோம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அதன் அடிப்படையில் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையை குறித்த இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா? என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் க.பொ.த சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்தும் மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

UAE ஆளுநர், பிரதமர், நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்தித்தார்

பாலஸ்தீனில் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்காக துஆ செய்வோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தேசிய ஷூரா சபை

editor

 முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்