உள்நாடு

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

(UTVNEWS |AMERICA) – இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2009  ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சவேந்திர டி சில்வா யுத்த மீறல்களில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்கா குறித்த தடையை  விதித்துள்ளது.

அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் இன்று வெளியிட்ட விஷேட அறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்ற ஷவேந்திர சில்வா, விசேட சேவைக்கான விபூஷன விருது, வீரவிக்ரம வீபூஷன விருது, ரணவிக்ரம மற்றும் ரணசூர பதக்கங்கள் ஆகியவற்றை தன்வசப்படுத்திக் கொண்டவராவார்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கஜபா படையணியில் இருந்து இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கைது