வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியா – மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி

(UTV|COLOMBO) – சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேரூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேரூந்து மதீனா அருகே ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Term of Presidential Commission probing into corruption and malpractices extended

பொகவந்தலாவை தோட்டம் ஒன்றில் மண்சரிவு

Russia – China joint air patrol stokes tensions