சூடான செய்திகள் 1

சற்றுமுன் வெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம்…

(UTV|COLOMBO) வௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்கள் எதிர்வரும் வாரம் வலைத்தளத்தில்

பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில்

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுதலை