அரசியல்உள்நாடு

சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தெஹிவளை பகுதியில் நேற்று (21) மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

editor

இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்க பட்ட சலுகை ரத்து