உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதிய சிற்றுண்டி சாலை திறந்து வைப்பு!

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “சிற்றுண்டி சாலை” நேற்று (09) செவ்வாய்க்கிழமை முன்னால் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் நடைபெற்றது.

பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில் இந்த சிற்றுண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார, சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சிற்றுண்டி சாலை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆர்.எஸ்.எச். லங்கா சோலர் நிறுவனத்தின் தவிசாளர் எம்.எஸ்.எம்.றியால் தலைமையிலான குழுவினரினால் பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக் கொண்டார்

editor

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர்